கள்ளச்சாராயம் குடித்து ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பிய 52 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம்


கள்ளச்சாராயம் குடித்து ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பிய 52 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம்
x
தினத்தந்தி 8 Jun 2023 6:45 PM GMT (Updated: 8 Jun 2023 6:46 PM GMT)

கள்ளச்சாராயம் குடித்து ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பிய 52 பேருக்கு தலா ரூ.50 ஆயிரத்தை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார்.

விழுப்புரம்

பிரம்மதேசம்:

மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்களுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி மரக்காணம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்துகொண்டு கள்ளச்சாராயம் குடித்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய 52 பேருக்கு தலா ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கினார். அப்போது அவர்கள் இனிமேல் சாராயம் குடிக்க மாட்டோம் என உறுதிமொழி கூறியபடி காசோலையை பெற்றுக்கொண்டனர்.

இதில் விழுப்புரம் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, மரக்காணம் தாசில்தார் பாலமுருகன், ஒன்றியக்குழு தலைவர் தயாளன், துணை தலைவர் பழனி, துணை செயலாளர் ரவிக்குமார், மத்திய ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், மண்டல துணை தாசில்தார் ஏழுமலை, மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story