செங்கல்பட்டு மாவட்டத்தில் கிராம உதவியாளர் தேர்வை 5 ஆயிரத்து 768 பேர் எழுதினர்


செங்கல்பட்டு மாவட்டத்தில் கிராம உதவியாளர் தேர்வை 5 ஆயிரத்து 768 பேர் எழுதினர்
x

செங்கல்பட்டு மாவட்டத்தில் கிராம உதவியாளர் தேர்வை 5 ஆயிரத்து 768 பேர் எழுதினர்.

செங்கல்பட்டு

கிராம உதவியாளர் தேர்வு

செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலகில் காலியாக உள்ள 57 கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப இணைய வழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவாய் தாசில்தார்கள் மூலம் கூராய்வு செய்யப்பட்டது.

ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பகம் மற்றும் முன்னாள் படைவீரர் நல அலுவலகம் மூலம் பெறப்பட்ட பட்டியலில் உள்ள ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கும் நேற்று செங்கல்பட்டு, திருப்போரூர், திருக்குழுக்குன்றம், தாம்பரம், வண்டலூர், மதுராந்தகம், செய்யூர் ஆகிய வட்டங்களில் 10 மையங்களில் தேர்வு நடைபெற்றது.

5 ஆயிரத்து 768 பேர் தேர்வு எழுதினர்

செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் 7 ஆயிரத்து 826 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 5 ஆயிரத்து 768 பேர் மட்டுமே தேர்வு எழுதினார்கள். இதுபோல வண்டலூர் கிரசண்ட் என்ஜினீயரிங் கல்லூரியில் நடைபெற்ற தேர்வு மையத்தில் மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 74 சதவீதம் பேர் தேர்வு எழுதினார்கள். தேர்வுகள் அமைதியாகவும், எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமலிருக்க தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


Next Story