சாராயம் விற்ற 5 பேர் கைது


சாராயம் விற்ற 5 பேர் கைது
x

கீழ்வேளூர் அருகே சாராயம் விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாகப்பட்டினம்

சிக்கல்:

கீழ்வேளூர் அருகே சாராயம் விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரோந்து பணி

நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவின் பேரில் பல்வேறு இடங்களில் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் போலீசார் ரோந்து பணி மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கீழ்வேளூர் போலீஸ் சரகம் காக்கழனி, பெருங்கடம்பனூர், சங்கமங்கலம் பகுதியில் கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

5 பேர் கைது

அப்போது காக்கழனி தோப்பு தெருவில் சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த சாமிநாதன் மகன் ஸ்ரீநாத் (வயது 20), முருகையன் மகன் கவுதமன் (22), காக்கழனி ஊராட்சி நுகத்தூர் வடக்கு தெருவில் சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (55) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் பெரும்கடம்பனூர் மெயின் ரோட்டில் சாராயம் விற்ற மில்லடி தெருவை சேர்ந்த தங்கபாண்டியன் (38), சங்கமங்கலம் வடக்கு தெருவில் சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த கந்தன் (44) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட 5 பேரிடமும் இருந்து தலா 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.


Next Story