விபத்தில் சிக்கி தம்பதி உள்பட 5 பேர் காயம்


விபத்தில் சிக்கி தம்பதி உள்பட 5 பேர் காயம்
x

இருவேறு சம்பவங்களில் விபத்தில் சிக்கி தம்பதி உள்பட 5 பேர் காயம் அடைந்தனர்.

திருவண்ணாமலை

இருவேறு சம்பவங்களில் விபத்தில் சிக்கி தம்பதி உள்பட 5 பேர் காயம் அடைந்தனர்.

தம்பதி படுகாயம்

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தை அடுத்த ரெட்டிபாளையம் கொல்லமேடு பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 37). இவரது மனைவி லட்சுமி (26). கணவன்-மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் கண்ணமங்கலம் புதிய பஸ் நிலையம் பின்புறம் சென்ற போது, பெரிய அய்யம்பாளையத்தை சேர்ந்த பிரேம்குமார் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் திடீரென தம்பதி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

மற்றொரு சம்பவம்

சந்தவாசல் அருகே உள்ள வெள்ளூரை சேர்ந்த கலைவாணன் மகன் பிரவீன் (20) என்பவர் வேலூர் வி.ஐ.டி. கல்லூரியில் படித்து வருகிறார். இவர், அம்மாபாளையம் கூட்ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்ற போது, அவரது பின்னால் வந்த கார் மோதியது.

இதில் பிரவீனும், அவரது மோட்டார் சைக்கிளுக்கு முன்னால் சென்ற பாபு (24), ஆரணி குண்ணத்தூர் மல்லிகா (55) ஆகிய 3 பேரும் காயம் அடைந்தனர். இதில் பிரவீன் சிகிச்சைக்காக வேலூர் தனியார் ஆஸ்பத்திரியிலும், மல்லிகா, பாபு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியிலும் சேர்க்கப்பட்டனர்.

இந்த சம்பவங்கள் குறித்து கண்ணமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், தரணி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story