பதிவுத்துறையில் 100 நாளில் ரூ.4,988 கோடி வருவாய் - தமிழ்நாடு அரசு தகவல்
பதிவுத்துறையில் 100 நாளில் ரூ.4,988 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
சென்னை,
பத்திரப்பதிவு துறையில் அமைச்சர் மூர்த்தி பல்வேறு சீர்த்திருத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் காரணமாக இதுவரை வரலாற்றில் இல்லாத அளவுக்கு பத்திரப்பதிவு துறை அதிக வருவாய் ஈட்டி உள்ளது.
அந்த வகையில், பதிவுத்துறையில் கடந்த ஏப்ரல் 1 முதல் ஜூலை 12ம் தேதி வரை 100 நாட்களில் ரூ.4,988.18 கோடி வருவாய் கிடைத்துள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 2021 இதே காலகட்டத்தில் ரூ.2,577.43 கோடி கிடைத்த நிலையில் தற்போது ரூ.2,410.75 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது. இதன் மூலம் பதிவுத்துறையில் அதிக வருவாய் கிடைத்துள்ளது.
Related Tags :
Next Story