சாராயம் விற்பனை-கடத்தலில் ஈடுபட்ட 47 பேர் கைது


சாராயம் விற்பனை-கடத்தலில் ஈடுபட்ட 47 பேர் கைது
x
தினத்தந்தி 15 May 2023 6:45 PM GMT (Updated: 15 May 2023 6:45 PM GMT)

திருவாரூர் மாவட்டத்தில் ஒரே நாளில் சாராயம் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட 47 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவாரூர்


திருவாரூர் மாவட்டத்தில் ஒரே நாளில் சாராயம் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட 47 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

போலீசாா் சோதனை

திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் மாவட்டத்தில், கஞ்சா விற்பனை, பணம் வைத்து சூதாட்டம், மணல் கடத்தல், லாட்டரி சீட்டு விற்பனை, சாராயம் கடத்தல் மற்றும் விற்பனை செய்தல் உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் குறித்து போலீசாா் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் சாராயம் குடித்த ஏராளமானோர் பலியானார்கள். மேலும் 10-க்கும் மேற்பட்ட நபர்கள் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தி உள்ளது.

47 பேர் கைது

இதை தொடர்ந்து நேற்று முன்தினம், சாராயம் விற்பனை செய்தவர்கள், வெளிமாநில சாராயத்தினை கடத்தியவர்கள், கள்ள சந்தையில் மது பாட்டில் விற்பனை செய்தவர்கள் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்யக்கோரி போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் உத்தரவிட்டார்.

அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், கொரடாச்சேரி, குடவாசல், நன்னிலம், பேரளம், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, மன்னார்குடி, வடுவூர், கூடூர், வலங்கைமான், பெருக வாழ்ந்தான் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அதில் ஒரே நாளில் 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 47 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து சுமார் 400 லிட்டர் சாராயம், 400 புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


Next Story