புதுக்கடை அருகேகேரளாவுக்கு கடத்த முயன்ற 420 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்
புதுக்கடை அருகேகேரளாவுக்கு கடத்த முயன்ற 420 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது.
கன்னியாகுமரி
புதுக்கடை:
கிள்ளியூர் வட்ட வழங்கல் அலுவலர் வேணுகோபால், பொறியாளர் நாகராஜன், தனிப்பிரிவு ஏட்டுகள் சுனில் மற்றும் ரமேஷ் ஆகியோர் நேற்று மாலை பைங்குளம் அருகே உள்ள பரக்காணி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சொகுசு காரை தடுத்து நிறுத்தினர். ஆனால் டிரைவர் காரை சாலையோரத்தில் நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். அதை தொடர்ந்து காரில் சோதனை செய்ததில் அதில் 12 கேன்களில் 420 லிட்டர் ரேஷன் மண்எண்ணெய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வருவாய்த்துறையினரும், போலீசாரும் காருடன் மண்எண்ணையை பறிமுதல் செய்து வள்ளவிளை மண்எண்ணெய் கிட்டங்கியில் ஒப்படைத்தனர். இந்த மண்எண்ணெயை கேரளாவுக்கு கடத்த முயன்றிருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story