விஷவாயு தாக்கி 4 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் - தேசிய பட்டியலின ஆணைய துணைத் தலைவர் விசாரணை


விஷவாயு தாக்கி 4 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் - தேசிய பட்டியலின ஆணைய துணைத் தலைவர் விசாரணை
x

உயிரிழந்த தொழிலாளர்களின் உறவினர்களை தேசிய பட்டியலின ஆணைய துணைத் தலைவர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

கரூர்,

கரூர் மாவட்டம் சுக்காலியூர் பகுதியில் கடந்த 15-ந்தேதி புதிய வீட்டின் கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து அங்கு நடைபெற்று வரும் கட்டுமான பணிகளையும் 24 மணி நேரத்திற்குள் நிறுத்துமாறும், அந்த வீட்டை 15 நாட்களுக்குள் இடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு மாநகராட்சி சார்பில் அங்கு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

இதனிடையே இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், தேசிய பட்டியலின ஆணையத்தின் துணைத் தலைவர் உள்ளிட்ட 4 பேர் கொண்ட குழுவினர் அப்பகுதிக்கு இன்று நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் உயிரிழந்த தொழிலாளர்களின் உறவினர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய ஆணையத்தின் துணைத் தலைவர், அரசு சார்பில் அவர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரண உதவிகள் குறித்தும் கேட்டறிந்தார்.


Next Story