கோவிலின் பின்புறத்தில் கிடந்த 4 சிலைகள்


கோவிலின் பின்புறத்தில் கிடந்த 4 சிலைகள்
x

திருமருகல் அருகே கோவிலின் பின்புறத்தில் 4 சிலைகள் கிடந்தன.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகை ஊராட்சி வாழ்மங்கலம் சோழ அய்யனார் கோவில் பின்புறம் கற்சிலைகள் கிடப்பதாக திட்டச்சேரி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் திட்டச்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது அங்கு சுமார் 50 ஆண்டுகளுக்கு மேல் பழமையான 1½ அடி உயரத்தில் ராகு பகவான் சிலை, 1½ அடி உயரத்தில் கேது சிலை, 1 அடி உயரத்தில் 2 அம்மன் சிலைகள் இருந்தது. இந்த கற்சிலைகளை போலீசார் கைப்பற்றி சென்று அகரக்கொந்தகை கிராம நிர்வாக அலுவலர் கோபாலகிருஷ்ணனிடம் ஒப்படைத்தனர். பின்னர் அந்த சிலைகளை அகரக்கொந்தகை கிராம நிர்வாக அலுவலகத்தில் அறையில் வைத்து பூட்டி வைக்கப்பட்டது. இரவு நேரமாக உள்ளதால் இந்த சிலைகள் நாளை(இன்று) நாகை தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைக்க உள்ளதாக கிராம நிர்வாக அலுவலர் தெரிவித்தார். இந்த .கற்சிலைகளை கடத்தி சென்றவர்கள் வாழ்மங்கலத்தில் சோதனை சாவடி இருப்பதால் போலீசாருக்கு பயந்து அங்கு வீசி சென்றார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story