சதுரகிரி கோவிலுக்கு செல்ல 4 நாட்கள் அனுமதி


சதுரகிரி கோவிலுக்கு செல்ல 4 நாட்கள் அனுமதி
x

சதுரகிரி கோவிலுக்கு செல்ல 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விருதுநகர்

வத்திராயிருப்பு,

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பிரதோஷம் மற்றும் ஆவணி மாத பவுர்ணமியை முன்னிட்டு வருகிற 28-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலை ஏறி சாமி தரிசனம் செய்ய வனத்துறையினர் மற்றும் கோவில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி கோவில் அமைந்துள்ளதால் பக்தர்கள் இரவில் தங்க அனுமதி வழங்கப்படவில்லை. அனுமதிக்கப்பட்ட நாட்களில் மழையோ அல்லது நீரோடைகளில் நீர்வரத்து அதிகமாக இருந்தால் மலையேறி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை என வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


Related Tags :
Next Story