கிருஷ்ணகிரியில் லாரியில் கடத்திய 38 மாடுகள் பறிமுதல் 4 பேர் கைது


கிருஷ்ணகிரியில்  லாரியில் கடத்திய 38 மாடுகள் பறிமுதல்  4 பேர் கைது
x

கிருஷ்ணகிரியில் லாரியில் கடத்திய 38 மாடுகள் பறிமுதல் 4 பேர் கைது

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் லாரியில் கடத்திய 38 மாடுகளை பறிமுதல் செய்த போலீசார் 4 பேரை கைது செய்தனர்.

38 எருமை மாடுகள்

திருவள்ளூர் மாவட்டம் கடப்பத்தூரை சேர்ந்தவர் ரகுராம் சர்மா (வயது 39). இவர் விலங்குகள் நல வாரியத்தில் உள்ளார். இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக கேரள மாநிலத்திற்கு எருமை மாடுகளை சிலர் கடத்தி செல்வதாக அவருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவர் மற்றும் வாரிய உறுப்பினர்கள் சிலர் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் அருகில் கண்காணித்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் எருமை மாடுகள் கடத்தி செல்வது தெரியவந்தது. விசாரணையில் அந்த லாரியில் 38 எருமை மாடுகள் இருந்தது தெரியவந்தது.

4 பேர் கைது

இதுகுறித்து ரகுராம் சர்மா கொடுத்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவசந்தர் வழக்குப்பதிவு செய்து, கேரள மாநிலம் வயநாட்டை சேர்ந்த முத்தாலித் (42), பினு (35), அஸ்கர் (31), ஹெர்சாத் (28) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 38 எருமை மாடுகளும், ஒரு லாரியும் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


Next Story