ஊரக திறனாய்வு தேர்வை 3,877 மாணவர்கள் எழுதினர்


ஊரக திறனாய்வு தேர்வை 3,877 மாணவர்கள் எழுதினர்
x

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக திறனாய்வு தேர்வை 3,877 மாணவர்கள் எழுதினர்.

புதுக்கோட்டை

ஊரக திறனாய்வு தேர்வு

தமிழகத்தில் ஊரகப்பகுதி மாணவர்களுக்கான ஊரக திறனாய்வு தேர்வு அரசு சார்பில் நடத்தப்படுகிறது. இதில் கிராம பஞ்சாயத்து, நகர பகுதிகளில் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் உள்ள மாணவர்கள் இத்தேர்வில் பங்கேற்கிறார்கள். இத்தேர்வின் வாயிலாக ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்வு செய்யப்படும் 50 மாணவர்கள், 50 மாணவிகள் என 100 பேருக்கு 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை ஆண்டுதோறும் தலா ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது.

3,877 மாணவர்கள் எழுதினர்

அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற ஊரக திறனாய்வு தேர்வில் அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் 9 மையங்களில் 103 பள்ளிகளை சேர்ந்த 2,194 மாணவர்கள் விண்ணப்பித்ததில் 2,157 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். 37 பேர் தேர்வுக்கு வரவில்லை. இதேபோல் புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 10 மையங்களில் 93 பள்ளிகளை சேர்ந்த 1,762 மாணவர்கள் விண்ணப்பித்ததில் 1,720 பேர் தேர்வு எழுதினார்கள். 42 பேர் தேர்வுக்கு வரவில்லை.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த ஆண்டு 196 பள்ளிகளில் இருந்து 3,956 மாணவர்கள் விண்ணப்பித்ததில் 3,877 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். 79 பேர் தேர்வுக்கு வரவில்லை. தேர்வு மையங்களில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மணிவண்ன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.


Next Story