எருது விடும் விழாவில் மாடுகள் முட்டியதில் 34 பேர் காயம்


எருது விடும் விழாவில் மாடுகள் முட்டியதில் 34 பேர் காயம்
x

எருது விடும் விழாவில் மாடுகள் முட்டியதில் 34 பேர் காயம் அடைந்தனர்.

வேலூர்

பேரணாம்பட்டு

எருது விடும் விழாவில் மாடுகள் முட்டியதில் 34 பேர் காயம் அடைந்தனர்.

பேரணாம்பட்டு அருகே உள்ள பல்லலகுப்பம் கிராமத்தில் எருது விடும் விழா நடைபெற்றது. குடியாத்தம் சப்-கலெக்டர் வெங்கட்ராமன் தலைமை தாங்கி, எருது விடும் விழாவை தொடங்கி வைத்தார்.

இதில் பேரணாம்பட்டு சுற்றுப்புற கிராமங்கள் மற்றும் கிருஷ்ணகிரி, பர்கூர், ஆம்பூர், வாணியம்பாடி, குடியாத்தம், காட்பாடி, லத்தேரி, கே.வி.குப்பம் உள்ளிட்ட ஊர்களில் இருந்து 234 காளைகள் பங்கேற்றன. கால்நடை மருத்துவ குழுவினரால் மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் போட்டியில் கலந்துகொள்ள காளைகள் அனுமதிக்கப்பட்டன.

விழாவில் காளைகள் முட்டியதில் 34 பேருக்கு காயம் ஏற்பட்டது. மேல்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதில் 5 பேர் மட்டும் மருத்துவ சிகிச்சைக்காக பேரணாம்பட்டு, குடியாத்தம் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

நிகழ்ச்சியில் பேரணாம்பட்டு தாசில்தார் நெடுமாறன், பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் வருவாய்துறையினர் கலந்துகொண்டனர்.


Next Story