மோட்டார் சைக்கிள் திருடிய 3 பேர் கைது
மோட்டார் சைக்கிள் திருடிய 3 பேர் கைது
கன்னியாகுமரி
குளச்சல்:
குளச்சல் அருகே ஆலஞ்சி பரவிளையை சேர்ந்தவர் சசிகரன் (வயது 46). இவர் படந்தாலுமூடு அரசு போக்குவரத்து கழக பணிமனையில் கண்டக்டராக வேலை செய்து வருகிறார். இவர் சம்பவத்தன்று ஆலஞ்சி சந்திப்பில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றார். வேலை முடிந்து வந்து பார்த்த போது அவரது மோட்டார் சைக்கிள் திருட்டு போனது தெரிய வந்தது. இது குறித்து சசிதரன் குளச்சல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப் - இன்ஸ்பெக்டர் தேவராஜ் வழக்குப்பதிவு செய்து சாமியார்மடத்தை சேர்ந்த சபரிஸ் (21), மற்றும் பள்ளியாடியை சேர்ந்த 17 வயதுடைய 2 சிறுவர்களையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டது.
Related Tags :
Next Story