மின்வேலியில் சிக்கி 3 தொழிலாளர்கள் பலி: உறவினர்கள் சாலை மறியல்


மின்வேலியில் சிக்கி 3 தொழிலாளர்கள் பலி: உறவினர்கள் சாலை மறியல்
x

மின் வேலியில் சிக்கி 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டிவனம்,

விழுப்புரம் மாவட்டம் வன்னிப்பேர் கிராமத்தை சேர்ந்தவர்கள் வெங்கடேசன்(வயது 40), முருகதாஸ்(34), சுப்பிரமணியன்(36). தொழிலாளர்களான இவா்கள் 3 பேரும் நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் உள்ள வாழைத்தோட்டம் வழியாக நடந்து சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக தோட்டத்தில் காட்டு பன்றிகளை கட்டுப்படுத்துவதற்காக போடப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கினர்.இதில் மின்சாரம் தாக்கி 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

உறவினர்கள் மறியல்

இதுதொடர்பாக பிரம்மதேசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதற்கிடையே விவசாய நிலத்தில் மின்வேலி அமைத்தவரை கைது செய்ய கோரியும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் அவர்களது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் திண்டிவனம்-மரக்காணம் சாலையில் நேற்று திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story