கஞ்சா பறிமுதல் 3 பேர் கைது
நாகர்கோவிலில் போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து 3 பேர்களை கைது செய்தனர்.
கன்னியாகுமரி
நாகர்கோவில்:
நாகர்கோவில் ஆசாரிபள்ளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குட்டி மற்றும் போலீசார் கோணம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக மோட்டார் சைக்கிளுடன் நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரணை செய்தனர். இதில் அவர்கள் தம்மத்துக்கோணம் சாஸ்தான்கோவில் தெருவைச் சேர்ந்த தினேஷ் (வயது 20) மற்றும் 18 வயது மதிக்கத்தக்க 2 நபர்கள் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்களிடம் நடத்திய சோதனையில் 100 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலமும், ரூ.1,500 பணமும் இருந்தது. பின்னர் 3 பேரையும் கைது செய்து கஞ்சா பொட்டலம் மற்றும் ரொக்கப்பணம், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் 3 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story