வேன் கவிழ்ந்து 23 பேர் காயம்
தேன்கனிக்கோட்டை அருகே வேன் கவிழ்ந்து 23 பேர் காயம் அடைந்தனர்.
தேன்கனிக்கோட்டை
வேன் கவிழ்ந்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா பென்னங்கூர் அருகே தனியார் ஆயத்தை ஆடை தயாரிக்கும் நிறுவனம் இயங்கி வருகிறது. இதில் மஞ்சுமலை மற்றும் தொட்டமஞ்சு மலை கிராமங்களை சேர்ர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். நேற்று மாலை பணி முடிந்து டிரைவர் உள்பட 22 தொழிலாளர்கள் வேனில் ஊருக்கு திரும்பி கொண்டு இருந்தனர்.
தேன்கனிக்கோட்டையில் இருந்து அஞ்செட்டி செல்லும் சாலையில் உள்ள மரக்கட்டா அருகே சென்ற போது முன்னால் சென்ற வாகனத்தை டிரைவர் முந்தி செல்ல முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வேன் டிரைவர் முனிராஜ் (வயது 25). தொழிலாளர்கள் ஜெயம்மா (18). கணேஷ் (26) நாகம்மா (19). நாகமது (36), பசம்மா (18) ஈரம்மா (19) உள்பட மொத்தம் 23 பேர் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தனர்.
தீவிர சிகிச்சை
இதையடுத்து அந்த வழியாக சென்ற பொதுமக்கள் காயமடைந்தவர்களை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.