ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றவர்களுக்கு 10, 12-ம் வகுப்புக்கு இணையான கல்விச்சான்றிதழ் - அரசாணை வெளியீடு


ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றவர்களுக்கு 10, 12-ம் வகுப்புக்கு இணையான கல்விச்சான்றிதழ் - அரசாணை வெளியீடு
x
தினத்தந்தி 17 May 2022 11:11 AM GMT (Updated: 17 May 2022 11:11 AM GMT)

ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றவர்களுக்கு 10, 12-ம் வகுப்பிற்கு இணையான கல்விச் சான்றிதழ் வழங்குவது தொர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை,  

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை செயலாளர் திரிலோக் குமார் ஐ.ஏ.எஸ். வெளியிட்டுள்ள அரசாணையின்படி, 8-ம் வகுப்பு பயின்று ஐ.டி.ஐ. எனப்படும் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2 ஆண்டுகள் தொழிற்படிப்பில் தேசிய தொழில் சான்றிதழ் பெற்றவர்களுக்கு 10-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதே போல் 10-ம் வகுப்புக்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் ஐ.டி.ஐ. படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 12-ம் வகுப்புக்கு இணையான கல்விச்சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றவர்கள் இனி குரூப்-4 உள்ளிட்ட போட்டித்தேர்வுகளை எழுதவும், 11-ம் வகுப்பு மற்றும் உயர்கல்வி ஆகியவற்றில் சேர்வதற்கும் வாய்ப்புகள் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story