நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: 3ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அதிமுக


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 31 Jan 2022 3:42 PM GMT (Updated: 31 Jan 2022 3:47 PM GMT)

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான 3ம் கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் 19-ம் தேதி நடக்க இருக்கிறது. வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கி, வரும் 4-ம் தேதி வரை நடைபெற உள்ளது. பிப்ரவரி 22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடை பெற உள்ளது. 

தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக அதன் கூட்டணிக் கட்சிகளுடன் இடப்பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 

இந்த நிலையில், பாஜக - அதிமுக கட்சிகளுக்கு இடையே இடப்பங்கீடு குறித்து விவகாரத்தில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்த நிலையில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்துப்போட்டியிடும் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 

இந்நிலையில் அதிமுக சார்பில் போட்டியிடும் மாநகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் மற்றும் நகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான 3-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது.

அதில் காஞ்சிபுரம், வேலூர், ஓசூர், கும்பகோணம், தஞ்சாவூர், ஈரோடு, நாகர்கோவில் மாநகராட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.  அதேபோன்று பொன்னேரி, குடியாத்தம், கடலூர் தெற்கு, நீலகிரி, பேரணாம்பட்டு, வடலூர், உதகை, குன்னூர், கூடலூர், பட்டுக்கோட்டை உள்ளிட்ட நகராட்சிகளுக்கான வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக அதிமுக சார்பில் ஏற்கனவே இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவித்திருந்நிலையில் தற்போது மூன்றாவது கட்ட வேட்பாளர்கள் பட்டியல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story