தென்காசி மாவட்டத்தின் 4 நீர்த்தேக்கங்களில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு - தமிழக அரசு உத்தரவு


தென்காசி மாவட்டத்தின் 4 நீர்த்தேக்கங்களில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு - தமிழக அரசு உத்தரவு
x
தினத்தந்தி 2 Nov 2021 11:11 PM GMT (Updated: 2 Nov 2021 11:11 PM GMT)

தென்காசி மாவட்டத்தின் 4 நீர்த்தேக்கங்களில் இருந்து இன்று தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தென்காசி மாவட்டத்தில் உள்ள அடவிநயினார்கோவில் நீர்த்தேக்கத்தின் கீழ் பாசனம் பெறும் மேட்டுக்கால், கரிசல்கால், பண்பொழிகால், வல்லாக்குளம்கால், இலத்தூர்கால், நயினாரகரம்கால், கிளங்காடுகால், கம்பளிக்கால், புங்கன்கால், சாம்பவர் வடகரைகால் மற்றும் இரட்டைக்குளம் கால்வாய் ஆகியவற்றின் நேரடி மற்றும் மறைமுகப் பாசனம் பெறும் மொத்தம் 7,643.15 ஏக்கர் பாசன நிலங்களுக்கு பிசான சாகுபடிக்கு அடவிநயினார்கோவில் நீர்த்தேக்கத்தில் இருந்து 3-11-2021 (இன்று) முதல் 30-3-2022 வரை 148 நாட்களுக்கு, நாள் ஒன்றிற்கு வினாடிக்கு 100 கனஅடி வீதம், 955.39 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது.

மேலும், தென்காசி மாவட்டம், தென்காசி வட்டம், கடனா நீர்த்தேக்கத்தின் கீழ் பாசனம் பெறும் அரசபத்து, வடகுறுவபத்துகால், ஆழ்வார்குறிச்சி தென்கால், ஆம்பூர் பெருங்கால், மஞ்சம்புளிகால், காக்கநல்லூர் கால், காங்கேயன்கால் ஆகியவற்றின் நேரடி மற்றும் மறைமுகப் பாசனம் 9,923.22 ஏக்கர் நிலங்களுக்கு பிசான சாகுபடிக்கு கடனா நீர்த்தேக்கத்தில் இருந்து 3-11-2021 (இன்று) முதல் 30-3-2022 வரை 148 நாட்களுக்கு, நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 125 கனஅடி வீதம், 1,653.87 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது.

இதேபோல், தென்காசி மாவட்டம், கடையநல்லூர் வட்டம், கருப்பாநதி நீர்த்தேக்கத்தின் கீழ் பாசனம் பெறும் பெருங்கால், பாப்பான்கால், சீவலன்கால், இடைக்கால், கிளங்காடுகால், ஊர்மேலழகியான்கால் ஆகியவற்றின் நேரடி மற்றும் மறைமுகப் பாசனம் மொத்தம் 9,514.70 ஏக்கர் நிலங்களுக்கு பிசான சாகுபடிக்கு கருப்பாநதி நீர்த்தேக்கத்தில் இருந்து 3-11-2021 (இன்று) முதல் 30-3-2022 வரை 148 நாட்களுக்கு, நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 25 கனஅடி வீதம் 1,189.34 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது.

மேலும், தென்காசி மாவட்டத்தில் உள்ள ராமநதி நீர்த்தேக்கத்தின் கீழ்பாசனம் பெறும் வடகால், தென்கால், பாப்பான்கால் மற்றும் புதுக்கால் ஆகியவற்றின் கீழ் நேரடி மற்றும் மறைமுகப் பாசனம் பெறும் 4,943.51 ஏக்கர் நிலங்களுக்கு பிசான சாகுபடிக்கு ராமநதி நீர்த்தேக்கத்தில் இருந்து 3-11-2021 (இன்று) முதல் 30-3-2022 வரை 148 நாட்களுக்கு, நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 60 கனஅடி வீதம் 823.91 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story