வடகிழக்கு பருவமழை தொடங்கியது: சென்னை வானிலை ஆய்வு மையம்


வடகிழக்கு பருவமழை தொடங்கியது: சென்னை வானிலை ஆய்வு மையம்
x
தினத்தந்தி 25 Oct 2021 6:10 PM IST (Updated: 25 Oct 2021 6:10 PM IST)
t-max-icont-min-icon

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

வடகிழக்கு பருவுமழை தென்னிந்திய பகுதிகளில் இன்று துவங்கியதால், திருநெல்வேலி, துாத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யும்,'' என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதன் காரணமாக இன்று திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், புதுக்கோட்டை, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

நாளை திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, நாமக்கல், கரூர், சேலம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். தெற்கு வங்க கடலின் மத்தியப் பகுதியில் வரும் 26ம் தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும். இது மேற்கு நோக்கி நகர்ந்து அதனை அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறும்.

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story