சொத்து குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேரில் ஆஜர்
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேரில் விசாரணைக்கு ஆஜரானார்.
சென்னை,
கடந்த ஜூலை 22ஆம் தேதி அதிமுக முன்னாள் போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான 26 இடங்களில் லஞ்சஒழிப்புத்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனையில் விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தெரியவந்தது. இதுதொடர்பாக விஜயபாஸ்கர் மீது லஞ்சஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.
இதைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி லஞ்ச ஒழிப்பு துறையினர் நேரில் ஆஜராகுமாறு எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பினர். ஆனால் உள்ளாட்சித் தேர்தலை காரணம் காட்டி நேரில் ஆஜராக முடியாது என விஜயபாஸ்கர் தரப்பில் விலக்கு கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது . இதையடுத்து விஜயபாஸ்கருக்கு மீண்டும் அக்டோபர் 25-ஆம் தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.
இந்நிலையில் சென்னை ஆலந்தூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் விஜயபாஸ்ர் மற்றும் அவரது சகோதரர் சேகர் ஆகியோர் நேரில் ஆஜராகினர். சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக அவர்களிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story