பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு கட்டாயம்


பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு கட்டாயம்
x
தினத்தந்தி 3 July 2021 10:19 PM GMT (Updated: 3 July 2021 10:19 PM GMT)

பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கு ஆன்லைன் முன்பதிவு கட்டாயமென கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.


பழனி,

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ள சூழலில், கோவில்களில் வழிபாடு செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அரசு நீக்கியுள்ளது. இதனை தொடர்ந்து நாளை முதல் (திங்கட்கிழமை) பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதுகுறித்து பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் இணை ஆணையர் நடராஜன் நிருபர்களிடம் கூறும்போது, பழனி முருகன் கோவிலுக்கு 1 மணி நேரத்திற்கு 1,000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

கோவிலின் இணையதள முகவரியான www.palanimurugan.hrce.tn.gov.in என தேர்வு செய்து முன்பதிவு செய்து கொள்ளலாம்.  இதுதவிர, 04545-242683 என்ற எண்ணில் தொடர்பு கொண்டும் முன்பதிவு செய்து கொள்ளலாம். பஞ்சாமிர்தம், லட்டு, அதிரசம், முறுக்கு போன்ற பிரசாதங்கள் விற்பனை செய்யப்படும்.

அன்னதானங்கள் பொட்டலங்களாக வழங்கப்படும். பக்தர்கள் தேங்காய், பூ மற்றும் பழம் போன்றவற்றை கொண்டு வருவதற்கு அனுமதி இல்லை.  பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தி கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.




Next Story