தமிழக கோவில்களை மத்திய அரசு கட்டுப்பாட்டில் எடுத்தால் தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும் - மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை


தமிழக கோவில்களை மத்திய அரசு கட்டுப்பாட்டில் எடுத்தால் தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும் - மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
x
தினத்தந்தி 3 March 2020 11:00 PM GMT (Updated: 3 March 2020 10:47 PM GMT)

தமிழக கோவில்களை மத்திய அரசு கட்டுப்பாட்டில் எடுத்தால் தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை, 

‘மத்திய தொல்லியல் துறையின் கீழ் உள்ள நினைவு சின்னங்கள் அடங்கிய பட்டியலை மறு ஆய்வு செய்யப் போகிறோம்’ என மத்திய கலை மற்றும் பண்பாட்டுத்துறை மந்திரி பிரகலாத் சிங் பட்டேல் உள்நோக்கத்துடன் அறிவித்து, மாநிலங்களின் கட்டுப்பாட்டில் உள்ள நினைவு சின்னங்களையும், கோவில்களையும் மத்திய தொல்லியல் துறை பட்டியலில் சேர்க்க முயற்சிப்பதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழகத்தில் உள்ள கோவில்கள் எல்லாம் ஏற்கனவே தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ளது.

மத்திய மந்திரியின் அறிவிப்பு அடாவடியானது. மத்திய-மாநில உறவுகளுக்கு எதிரானது.

மத்திய மந்திரியின் இந்த அறிவிப்புக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனத்தைத் தெரிவிக்கவேண்டும். தமிழக மக்களின் உணர்வை மீறி மாநில உரிமையை நசுக்கும் விதமாக, கோவில்களையும், நினைவு சின்னங்களையும் எடுத்துக்கொண்டு தமிழர்களின் நாகரிகத்தை, கலாசாரத்தை சிதைக்க மத்திய பா.ஜ.க. அரசு முயற்சி செய்யுமேயானால் அதை எதிர்த்து தி.மு.க. சார்பில் தமிழ் மக்களை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்க விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story