கட்சி தாவல் தடை சட்டத்தால் பயன் இல்லை இந்தியாவில் விகிதாசார பிரதிநிதித்துவ முறை வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்


கட்சி தாவல் தடை சட்டத்தால் பயன் இல்லை இந்தியாவில் விகிதாசார பிரதிநிதித்துவ முறை வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 15 July 2019 6:36 PM GMT (Updated: 15 July 2019 6:36 PM GMT)

கட்சி தாவல் தடை சட்டத்தால் பயன் இல்லை இந்தியாவில் விகிதாசார பிரதிநிதித்துவ முறை வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை, 

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

கர்நாடகத்தில் நடைபெற்று வரும் அரசியல் சித்து விளையாட்டுகள் தலைசுற்ற வைக்கின்றன. இத்தகைய அரசியல் விளையாட்டுகள் ஜனநாயகத்துக்கு எந்த வகையிலும் வலிமை சேர்க்காது என்பதே உண்மை.

கட்சி தாவல்கள் வாக்களித்த மக்களுக்கு பிரதிநிதிகள் கிடைக்காதது உள்ளிட்ட அனைத்து தீர்வுகளுக்கு ஒரே தீர்வு விகிதாசார பிரதிநிதிகள் முறையை அறிமுகம் செய்வது மட்டும் தான். அது ஒரு அரசியல் அருமருந்து. விகிதாசார பிரதிநிதித்துவ முறை அறிமுகப்படுத்தப்படும் போது, கட்சி தான் முன்னிறுத்தப்படுமே தவிர தனிநபர்கள் முன்னிறுத்தப்பட மாட்டார்கள். தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் பெறும் வாக்குகளின் அடிப்படையில் ஒவ்வொரு கட்சிக்கும் உறுப்பினர் எண்ணிக்கை ஒதுக்கப்படும். இந்தியாவை சுற்றி உள்ள இலங்கை, நேபாளம் உள்ளிட்ட 87 நாடுகளில் இம்முறை தான் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியா போன்ற பல கட்சி அரசியல் முறை உள்ள நாடுகளுக்கு விகிதாசார பிரதிநிதித்துவம் தான் மிகவும் பொருத்தமாக இருக்கும். இதன் மூலம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாசாரத்தை முற்றிலும் ஒழிக்க முடியும். எனவே இந்தியாவிலும் விகிதாசார பிரதிநிதித்துவ முறையை நடைமுறைப்படுத்துவது குறித்த விவாதத்தை தொடங்க மத்திய அரசு முன் வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story