பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒபிஎஸ் சந்திப்பு


பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒபிஎஸ் சந்திப்பு
x
தினத்தந்தி 22 Feb 2019 1:28 PM IST (Updated: 22 Feb 2019 1:28 PM IST)
t-max-icont-min-icon

பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார்.

மதுரை, 

கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மதுரை வந்துள்ள பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவை அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். 

வரும் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுவது தற்போது உறுதியாகியுள்ளது. அதிமுக கூட்டணியில், பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, பாஜக போட்டியிடும் 5 தொகுதிகள் எவை என்பது குறித்து இந்த சந்திப்பின் போது இரு தலைவர்களும் ஆலோசிப்பார்கள் என கூறப்படுகிறது. 

அதேபோல், தேமுதிகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிப்பதால், இந்த விவகாரம் குறித்தும் அமித்ஷாவுடன் ஓ. பன்னீர் செல்வம் ஆலோசித்து இருக்கக்கூடும்  என தெரிகிறது. 

Next Story