கூவத்தூர் விடுதி....மெரினா தியானம்.....நம்பிக்கை வாக்கெடுப்பு...ஆர்.கே.நகர் தேர்தல் மக்களிடையே ஒரு கருத்துகணிப்பு


கூவத்தூர் விடுதி....மெரினா தியானம்.....நம்பிக்கை வாக்கெடுப்பு...ஆர்.கே.நகர் தேர்தல் மக்களிடையே ஒரு கருத்துகணிப்பு
x
தினத்தந்தி 28 March 2017 10:49 AM IST (Updated: 28 March 2017 10:49 AM IST)
t-max-icont-min-icon

அடுத்தடுத்த அதிர்வலைகளை ஏற்படுத்திய அரசியல் நிகழ்வுகள் குறித்து மக்களின் மனநிலை என்ன? என்பது குறித்து தந்தி டிவி பிரமாண்ட கருத்துக்கணிப்பு நடத்தி உள்ளது

சென்னை

முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு  ஓ. பன்னீர்செல்வம் தன் பதவியை ராஜினாமா செய்தார். திடீரென்று ஒரு நாள் ஓ.பன்னீர்செல்வம் மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்தில் தியானம் செய்த பிறகு வலுக்கட்டாயமாக என்னை ராஜினாமா செய்ய வைத்தார்கள் என்றார். ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளது, அதனை நிவர்த்தி செய்யவேண்டிய பொறுப்பு இருப்பதால் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்றார். சசிகலா குடும்பம் குறித்து 10 சதவிதம் மட்டும்தான் கூறினேன். 90சதவிதம் இன்னும் உள்ளது என்றார்.

சசிகலாவுக்கு எதிராக பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கியதை அடுத்து, பிப்ரவரி 8ம் தேதி முதல் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள் காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூரில் உள்ள கோல்டன் பே விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட எடப்பாடி பழனிசாமி, பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை அதாவது 18ம் தேதி வரை அனைத்து எம்எல்ஏக்களும் விடுதியில்தான் தங்க வைக்கப்பட்டனர்.

இந்த 10 நாட்களில், விடுதிக்குள் வெளி ஆட்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அவ்வளவு ஏன், அந்த விடுதியை சுற்றியிருந்த கிராம மக்கள் கூட அவர்களது வீடுகளுக்குச் செல்ல கெடுபிடிகள் பின்பற்றப்பட்டன. ஒரு சமயம் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

பின்னர்  அ.தி.மு.க (சசிகலா அணி) சார்பில் எடப்பாடி பழனிசாமி  முதல்வராக தேர்ந்து எடுக்கபட்டார். பல்வேரூ பிரச்சினைகளுக்கு இடையில் அவர் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார். இந்த நிலையில் ஜெயல்லைதா மறைவை தொடர்ந்து காலியாக இருந்த ஆர்.கே நகர் தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கபட்டது.

சசிகலா, ஓ.பன்னீர் செல்வம் அணியினரால் அ.தி.மு.க. கட்சியையும், இரட்டை இலை சின்னத்தையும் தேர்தல் கமி‌ஷன் தற்காலிகமாக முடக்கியது. ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) என்ற கட்சி பெயரையும், ‘இரட்டை மின் விளக்கு’ என்ற சின்னத்தையும், சசிகலா அணிக்கு அ.தி.மு.க. (அம்மா) என்ற கட்சி பெயரையும், ‘தொப்பி’ சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.

இதையடுத்து ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வம் அணியின் வேட்பாளர் இ.மதுசூதனன் ‘இரட்டை மின் விளக்கு’ சின்னத்திலும், சசிகலா அணி சார்பில் போட்டியிடும் டி.டி.வி.தினகரன் ‘தொப்பி’ சின்னத்திலும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தனர். அந்தந்த சின்னத்துக்கு ஆதரவாக அவர்கள் பொதுமக்களிடம் வாக்குகள் திரட்டி வருகின்றனர். ஆ.ர்.கே நகரில்  அனல் பறக்கும் பிரசாரம் நடட்ந்ஹு வருகிறது

கூவத்தூர் சொகுசு விடுதி....மெரினா தியானம்.....நம்பிக்கை வாக்கெடுப்பு வரை... ஆர்.கே. நகர் தேர்தல் என  அடுத்தடுத்த அதிர்வலைகளை ஏற்படுத்திய அரசியல் நிகழ்வுகள் குறித்து  மக்களின் மனநிலை என்ன? என்பது குறித்து தந்தி டிவி பிரமாண்ட கருத்துக்கணிப்பு நடத்தியது அதன் முடிவுகள் குறித்து"மக்கள் யார் பக்கம்"  இரவு 9 மணிக்கு ஒளீபரப்பாகி வருகிறது.

தற்போதைய தமிழக அரசியல் நிகழ்வுகள்?
கவலைக்குரியது 74 சதவீதம்
எதிர்பார்த்தது 22 சதவீதம்
கருத்து இல்லை 4 சதவீதம்

சசிகலாவுக்கு ஓ.பன்னீர் செல்வத்தின் எதிர்ப்பு
எதிர்பார்க்கவில்லை 55 சதவீதம்
எதிர்பார்த்தது 41 சதவீதம்
கருத்து இல்லை 4 சதவீதம்

சசிகலாவுக்கு ஓ.பன்னீர் செல்வத்தின் எதிர்ப்பு
வரவேற்க கூடியது 84 சதவீதம்
கட்சிக்கு துரோகம் 7 சதவீதம்
கருத்து இல்லை 9 சத்வீதம்

அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூவத்தூரில் அடைத்து வைக்கபட்டது குறித்த கேள்விக்கு னநாயகத்தின் கரும்புள்ளி  என 83 சதவீதத்தினரும்,உட்கட்சி விவகாரம் என 12 சதவீதம் பேரும் கருத்து இல்லை என 5 சதவீதம் பேரும்  வாக்களித்து உள்ளனர்.

அ.தி.மு.க  எம்.எல்.ஏக்கள் கூவத்தூரில் தங்கியது குறித்து  அ.தி.மு.க வின் அச்சம் -81 சதவீதம் பேரும்  அ.தி.மு.கவின் ஒழுக்கம் 11 சதவீதம் பேரும்,கருத்து இல்லை என 8 சதவீதம் பேரும் வாக்களித்து உள்ளனர்.

அ.தி.மு.கவின் எத்ர்காலம் குறித்து உங்கள் கருத்து என்ன கேள்விக்கு  சிதைந்து மற்றொரு அரசியல் கட்சியாக உருவெடுக்கும் என 46 சதவீதம் பேரும்,தற்போதைய குழப்பதை சமாளித்து வலுவாக இருக்கும் என 44 சதவீதம் பேரும்,கருத்து இல்லை என 10 சதவீதம் பேரும் வாக்களித்து உள்ள்னர்.

தற்போதைய அரசியல் குழப்பம் யாருக்கு சாதகம் என்ற கேள்விக்கு தி.மு.கவுக்கு என 61 சதவீதம் பேரும்,ஓ.பி.எஸ் அணிக்கு என 26 சதவீதம் பேரும்,  பாரதீய ஜனதாவுக்கு என 9 சதவீதம் பேரும்  மற்றவை என 4 சதவீதம் பேரும் வாக்களித்து உள்ளனர்.


Next Story