பா.ம.க.வினர் 20 பேர் விடுதலை


பா.ம.க.வினர் 20 பேர் விடுதலை
x

பாளையங்கோட்டை சிறையில் இருந்து பா.ம.க.வினர் 20 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் என்.எல்.சி. நிறுவனத்துக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இதில் கைது செய்யப்பட்டவர்களில் 20 பேர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

அவர்களுக்கு கோர்ட்டு ஜாமீன் வழங்கியதையொட்டி நேற்று 20 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். அப்போது நெல்லை தெற்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் தங்கராஜ் தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் மேட்டூர் எம்.எல்.ஏ. சதாசிவம், மயிலை எம்.எல்.ஏ. சிவக்குமார், சேலம் முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்தி உள்ளிட்டோர், சிறையில் இருந்து வெளியே வந்த பா.ம.க.வினருக்கு பொன்னாடை அணிவித்து, இனிப்புகள் வழங்கி வரவேற்றனர்

இதுகுறித்து சதாசிவம் எம்.எல்.ஏ. கூறுகையில், கடத்த மாதம் 28-ந் தேதி மண்ணை காக்கவும், மக்களுக்காகவும் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் 55 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களை ஜாமீனில் வெளியே கொண்டு வந்துள்ளோம்.

மத்திய-மாநில அரசுகள் என்.எல்.சி. நிறுவனத்துக்கு நிலங்களை கையகப்படுத்தக் கூடாது. விவசாயத்தை பாதுகாக்க வேண்டும். எத்தனை வழக்குகள் போட்டாலும் பா.ம.க. அஞ்சாது. இந்த போராட்டம் தொடரும் என்றார்.

அப்போது நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் அன்பழகன், தென்காசி மாவட்ட செயலாளர்கள் இசக்கி முத்து, சீதாராமன், தூத்துக்குடி மாவட்ட செயலாளர்கள் ராமச்சந்திரன், அயன் சின்னதுரை மற்றும் நெல்லை மாவட்ட அமைப்பு செயலாளர் ஜீசஸ் ஜான், விவசாய அணி செயலாளர் செல்லப்பா சுப்ரமணியன் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Related Tags :
Next Story