விஷ சாராயம் குடித்து 12 பேர் பலியான விவகாரம்:மரக்காணம் போலீஸ் ஏட்டுகள் 2 பேர் பணியிடை நீக்கம்


விஷ சாராயம் குடித்து 12 பேர் பலியான விவகாரம்:மரக்காணம் போலீஸ் ஏட்டுகள் 2 பேர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 15 May 2023 6:45 PM GMT (Updated: 15 May 2023 6:45 PM GMT)

விஷ சாராயம் குடித்து 12 பேர் பலியான விவகாரத்தில் மரக்காணம் போலீஸ் ஏட்டுகள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

விழுப்புரம்


மரக்காணத்தை அடுத்த எக்கியார்குப்பத்தில் மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை குடித்தவர்களில் இதுவரை 12 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். மேலும் 38 பேர் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, புதுச்சேரி அரசு, ஜிப்மர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த துயர சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது.

இந்நிலையில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, மதுவிலக்கு அமல்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி ஆகியோரை பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து அரசு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து மரக்காணம் போலீஸ் நிலைய ஏட்டு மகாலிங்கம், தனிப்பிரிவு ஏட்டு ரவி ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. (பொறுப்பு) பகலவன் உத்தரவிட்டுள்ளார்.


Next Story