சந்தன மரக்கட்டைகளை பதுக்கிய 2 பேர் கைது


சந்தன மரக்கட்டைகளை பதுக்கிய 2 பேர் கைது
x

அய்யலூர் அருகே சந்தன மரக்கட்டைகளை பதுக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல்

வடமதுரை:

அய்யலூர் அருகே எஸ்.கே.நகரில் உள்ள ஒரு தோட்டத்தில் சந்தன மரக்கட்டைகள் பதுக்கி வைத்து இருப்பதாக அய்யலூர் வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் வனச்சரகர் குமரேசன் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது தோட்டத்து அறையில் 5 கிலோ சந்தன மரக்கட்டைகள் இருந்தது. இதையடுத்து தோட்டத்தில் இருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், அவர்கள் அதே பகுதியை சேர்ந்த ராஜா (வயது 37), பாண்டி (29) என்பதும், விற்பனைக்காக சந்தன மரக்கட்டைகளை பதுக்கியதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். சந்தன மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.



Related Tags :
Next Story