பணம் கேட்டு மிரட்டிய 2 பேர் கைது
நெல்லையில் பணம் கேட்டு மிரட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை பெருமாள்புரம் சி.எஸ்.ஐ. சர்ச் பகுதியை சேர்ந்தவர் சுடலைமணி மகன் மணிகண்டன் (வயது 23). தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் பெருமாள்புரத்தில் மீன் கடை அருகே நின்றுகொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த இலந்தைகுளத்தை சேர்ந்த பச்சைக்கிளி (37) என்பவர் மணிகண்டனிடம் பணம் கேட்டுள்ளார். அவர் கொடுத்த மறுத்ததால் அவரிடம் பச்சைக்கிளி தகராறு செய்து மிரட்டியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பச்சைக்கிளியை கைது செய்தனர். பச்சைக்கிளி ரவுடி பட்டியலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் வண்ணார்பேட்டை சிறுகுறிப்புதொண்டர் தெருவை சேர்ந்த கணேசன் மகன் இசக்கிமுத்து (21) என்பவர் பாளையங்கோட்டை போஸ்ட் ஆபீஸ் அருகே நடந்து சென்றார். அப்போது எதிரே வந்த திம்மராஜபுரத்தை சேர்ந்த முத்துக்குட்டி (27) என்பவர் கத்தியை காட்டி பணம் கேட்டுள்ளார். மேலும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாாின் பேரில் பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துகுட்டியை கைது செய்தனர்.