கொக்கு, உடும்புகளை வேட்டையாடிய நரிக்குறவர்கள் 2 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை காட்டுமன்னார்கோவில் நீதிமன்றம் தீர்ப்பு


கொக்கு, உடும்புகளை வேட்டையாடிய      நரிக்குறவர்கள் 2 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை       காட்டுமன்னார்கோவில் நீதிமன்றம் தீர்ப்பு
x
தினத்தந்தி 7 Sep 2023 6:45 PM GMT (Updated: 7 Sep 2023 6:46 PM GMT)

கொக்கு, உடும்புகளை வேட்டையாடிய நரிக்குறவர்கள் 2 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டணை விதித்து காட்டுமன்னார்கோவில் நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

கடலூர்

காட்டுமன்னார்கோவில்,

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே குண்டவெளி கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆரஞ்சு மகன் சந்திரன் (வயது 43). அம்மாவாசை மகன் பாபு (58). நரிக்குறவர்களான இவர்கள் 2 பேரும் கடந்த 2021-ம் ஆண்டு காட்டுமன்னார்கோவில் அருகே அறந்தாங்கி கிராமத்தில் 3 உடும்புகள் மற்றும் 11 கொக்குகளை வேட்டையாடினர். இதுகுறித்த புகாரின் பேரில், சிதம்பரம் வனச்சரக அலுவலர் செந்தில்குமார், வனச்சரக பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சந்திரன், பாபு ஆகியோரை கைது செய்தார்.மேலும் இது தொடர்பான வழக்கு காட்டுமன்னார்கோவில் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் மாவட்ட உரிமையியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மணிகண்டன், உடும்பு மற்றும் கொக்குகளை வேட்டையாடிய சந்திரன், பாபு ஆகிய 2 பேருக்கும் தலா 3 ஆண்டு சிறைதண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். இதையடுத்து சந்திரன், பாபு ஆகிய 2 பேரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story