தச்சு தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது
வெள்ளிச்சந்தை அருகே தச்சு தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது
கன்னியாகுமரி
ராஜாக்கமங்கலம்,
வெள்ளிச்சந்தை அருகே பரப்புவிளையை சேர்ந்தவர் கண்ணன் (வயது 52). தச்சு தொழிலாளி. இவருக்கும், புளியடி காலனியை சேர்ந்த செலின்குமார், வினோத், விவேக் ஆகியோருக்கும் இடையே முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று கண்ணன் பரப்புவிளையில் நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு செலின்குமார் உள்பட 3 பேர் வந்தனர். அவர்கள் கண்ணனை தகாத வார்த்தையால் பேசி, அரிவாள் மற்றும் கம்புகளால் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த கண்ணன் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வெள்ளிச்சந்தை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் செலின்குமார், வினோத், விவேக் ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத், விவேக் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story