பழங்குடியினருக்கான அடிப்படை வசதிகளை மேற்கொள்ள ரூ.17.18 கோடி நிதி - தமிழக அரசு அரசாணை


பழங்குடியினருக்கான அடிப்படை வசதிகளை மேற்கொள்ள ரூ.17.18 கோடி நிதி - தமிழக அரசு அரசாணை
x

பழங்குடியினருக்கான அடிப்படை வசதிகளை மேற்கொள்ள தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

சென்னை,

பழங்குடியினருக்கான அடிப்படை வசதிகளை மேற்கொள்ள ரூ.17.18 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;-

"அண்மையில் நடைபெற்ற 2022-2023-ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையின் போது ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரால் கீழ்க்கண்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதன்படி, 'திருவண்ணாமலை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், கோயம்புத்தூர், நீலகிரி, சேலம் மற்றும் தருமபுரி ஆகிய 11 மாவட்டங்களில் வாழும் பழங்குடியின மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் சாலை வசதி, குடிநீர் வசதி, தடுப்பணை கட்டுதல் மற்றும் பள்ளிகள் பராமரிப்பு, பழுது பார்த்தல் மற்றும் மேம்படுத்துதல் போன்ற உட்கட்டமைப்பு பணிகள் ரூ.17.00 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்' என்று அறிவித்தார்.

இந்நிலையில் 2022-2023 ஆம் ஆண்டு விரிவான பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் பழங்குடியினர்களுக்கு அடிப்படை வசதிகள், சாலை வசதி, குடிநீர் வசதி, தடுப்பணை கட்டுதல் மற்றும் பள்ளிகள் பராமரிப்பு, பழுது பார்த்தல் மற்றும் மேம்படுத்துதல் போன்ற திட்டங்களுக்கு ரூ.17.18 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஆணை வெளியிடப்படுகிறது."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story