மின்இணைப்புடன் ஆதார் இணைக்கும் முகாம்களில் முதல் நாளில் 15 ஆயிரம் பேர் பதிவு


மின்இணைப்புடன் ஆதார் இணைக்கும் முகாம்களில் முதல் நாளில் 15 ஆயிரம் பேர் பதிவு
x
தினத்தந்தி 29 Nov 2022 7:30 PM GMT (Updated: 29 Nov 2022 7:31 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் முகாம்களில் முதல் நாளில் சுமார் 15 ஆயிரம் பதிவு செய்துள்ளதாக மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறினார்.

நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் முகாம்களில் முதல் நாளில் சுமார் 15 ஆயிரம் பதிவு செய்துள்ளதாக மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறினார்.

இணைப்பு

தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கவேண்டும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது. இதற்கான சிறப்பு முகாம் நேற்று முன்தினம் முதல் மின்வாரிய அலுவலகங்களில் தொடங்கி உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 76 மின்வாரிய பிரிவு அலுவலகங்களிலும் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

நாமக்கல் பரமத்திரோட்டில் உள்ள துணைமின்நிலைய வளாகத்தில் 3 பிரிவு அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலகத்திற்கு பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து ஆதார் எண்ணை இணைத்து சென்றனர். நேற்று முன்தினம் தொடங்கிய முகாம் முதல் நாளில் சுமார் 15 ஆயிரம் பேர் மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்ததாக மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறினார்.

76 இடங்களில் சிறப்பு முகாம்

வருகிற டிசம்பர் மாதம் 31-ந் தேதி வரை இந்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது. பண்டிகை நாட்கள் தவிர, ஞாயிற்றுக்கிழமை உள்பட அனைத்து நாட்களிலும் காலை 10.30 மணி முதல் மாலை 5.15 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து நாமக்கல் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சிவக்குமார் கூறியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாய நுகர்வோர், தங்களது மின் இணைப்பு எண்ணை, ஆதாருடன் இணைக்கவேண்டும். மாவட்டம் முழுவதும் சுமார் 5½ லட்சம் மின்இணைப்புகள் உள்ளன. மாவட்டத்தில் உள்ள 76 மின்வாரிய பிரிவு அலுவலங்களிலும் மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதற்காக அனைத்து மின்வாரிய பிரிவு அலுவலங்களிலும் கூடுதல் கவுண்ட்டர்கள் திறக்கப்பட்டு உள்ளன. கூடுதல் பணியாளர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர். பொதுமக்கள் மின்வினியோக அட்டை மற்றும் ஆதார் கார்டுடன் வந்து மிக எளிதாக இணைத்து விட்டு சென்றுவிடலாம். பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்தை போக்கும் வகையில் டிசம்பர் மாதம் 31-ந் தேதி வரை, மின்வாரிய அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story