அ.தி.மு.க.வினர் 15 ஆயிரம் பேர் பங்கேற்க ஏற்பாடு


அ.தி.மு.க.வினர் 15 ஆயிரம் பேர் பங்கேற்க ஏற்பாடு
x

மதுரையில் அடுத்த மாதம் நடைபெறும் மாநாட்டில் விருதுநகர் மேற்கு மாவட்டத்தை சேர்ந்த அ.தி.மு.க.வினர் 15 ஆயிரம் பேர் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

விருதுநகர்

சிவகாசி,

மதுரையில் அடுத்த மாதம் நடைபெறும் மாநாட்டில் விருதுநகர் மேற்கு மாவட்டத்தை சேர்ந்த அ.தி.மு.க.வினர் 15 ஆயிரம் பேர் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

ஆலோசனை கூட்டம்

விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சிவகாசியில் நேற்று காலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி. ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு பேசியதாவது:-

மதுரையில் அடுத்த மாதம் 20-ந்தேதி அ.தி.மு.க. எழுச்சி மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் விருதுநகர் மேற்கு மாவட்டத்தில் இருந்து 500-க்கும் அதிகமான பஸ், வேன், கார்களில் அ.தி.மு.க.வினர் 15 ஆயிரம் பேர் சென்று கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த மாநாட்டில் அ.தி.மு.க.வினர் குடும்பத்தினருடன் கலந்து கொள்ள வேண்டும்.

மாநாடு

மாநாட்டில் கலந்து கொள்ள வரும் வாகனங்களில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் படங்கள் பெரிய அளவில் இருக்க வேண்டும். கட்சியின் மூவண்ண கொடிகளை கட்டி வர வேண்டும்.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க. என்ற கட்சியே இருக்காது என்று எதிரிகள் கூறிய நிலையில் இன்று அ.தி.மு.க. வீறுகொண்டு எழுந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் எடப்பாடி பழனிசாமி தான். வருகிற 29-ந்தேதி சிவகாசியில் முன்னாள் அமைச்சர்கள் 13 பேர் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. மான்ராஜ், முன்னாள் அமைச்சர் இன்பதமிழன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராஜவர்மன், சந்திரபிரபா முத்தையா, முன்னாள் யூனியன் தலைவர் வேண்டுராயபுரம் சுப்பிரமணியம், அவைத்தலைவர் விஜயகுமார், ஒன்றிய செயலாளர் ஆரோக்கியராஜ், பகுதி செயலாளர் ஷாம், கிருஷ்ணமூர்த்தி, வக்கீல் முத்துப்பாண்டியன், டாக்டர் விஜயஆனந்த், ராஜபாளையம் பாபுராஜ், மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story