காரில் கடத்தப்பட்ட 1,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்


காரில் கடத்தப்பட்ட 1,200 கிலோ   ரேஷன் அரிசி பறிமுதல்
x

காரில் கடத்தப்பட்ட 1,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

ஈரோடு

டி.என்.பாளையம்

டி.என்.பாளையத்தை அடுத்த கே.என்.பாளையம் பகுதியில் நேற்று காலை 6 மணி அளவில் ரேஷன் அரிசியை காரில் கடத்தி வருவதாக பங்களாப்புதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து ரோந்து பணியில் இருந்த போலீசார் சத்தியமங்கலம்- அத்தாணி சாலையில் அரக்கன் கோட்டை அருகே வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார்கள். அதில் சுமார் 1,200 கிலோ எடையுள்ள ரேஷன் அரிசி சிறு சிறு மூட்டைகளாக கட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து போலீசார் காரை ஓட்டிவந்த டிரைவர் பவானி மேற்கு தெருவவை சேர்ந்த மணிகண்டன் (வயது 30) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அதில் அவர் பவானியை சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கு ரேஷன் அரிசி மூட்டைகளை கொண்டு செல்வதாக கூறினார். இதையடுத்து ரேஷன் அரிசி மூட்டைகளுடன் காரை பறிமுதல் செய்த பங்களாப்புதூர் போலீசார் பிடிபட்ட மணிகண்டனை ஈரோடு மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்கள்.


Next Story