மது, சாராயம் விற்ற 12 பேர் கைது


மது, சாராயம் விற்ற 12 பேர் கைது
x

ஆம்பூர், நாட்டறம்பள்ளி, ஜோலார்பேட்டையில் மது, சாராயம் விற்ற 12 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பத்தூர்

ஆம்பூர்

ஆம்பூரை அடுத்த வடபுதுப்பட்டு பகுதியில் வெளிமாநில மதுவிற்ற அதே பகுதியை சேர்ந்த சரத்குமார் (வயது 30) என்பவரை தாலுகா போலீசார் மடக்கிப் பிடித்தனர். அவரிடம் இருந்து 55 வெளிமாநில மதுபாட்டிலை பறிமுதல் செய்தனர். அதேபோல் நாயக்கனேரி மலையில் நடந்த சோதனையில் வீட்டின் அருகே சாராயம் விற்ற பெரியூரை சேர்ந்த சம்பத் (39) என்பவரை கைது செய்தனர்.

மேலும் உமராபாத் போலீசார் பாலூரில் சோதனை செய்த போது அங்கு சாராயம் விற்ற பேரணாம்பட்டை அடுத்த பங்காளமேடு பகுதியை சேர்ந்த நவீன்குமார் (30), சின்னபள்ளி குப்பத்தை அடுத்த ஈச்சம்பட்டு பகுதியை சேர்ந்த சேகர் மனைவி சித்ரா (60), மேல்ஈச்சம்பட்டு பகுதியை சேர்ந்த முருகவேல் (46), ஆம்பூரை அடுத்த கரும்பூர் அருகே உள்ள குப்புராஜபாளையத்தை சேர்ந்த பார்வதி (54) ஆகியோரை கைது செய்தனர்.

நாட்டறம்பள்ளி

இதேபோல நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் நேற்று நாட்டறம்பள்ளி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வெலக்கல் நத்தம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்த கமல் (38), வெலக்கல்நத்தம் பகுதியை சேர்ந்த முனிசாமி மகன் முனியப்பன் (35), முத்தனப்பள்ளி பகுதியை சேர்ந்த பூபாலன் மகன் ஸ்ரீதர் (24) ஆகியோர் தங்கள் வீட்டின் பின்புறம் சாராயம் விற்பனை செய்தது தெரியவந்தது.

இதனையெடுத்து அவர்கள் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து தலா 10 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி, சப்- இன்ஸ்பெக்டர்கள் காதர்கான், சேதுக்கரசன் மற்றும் போலீசார் நேற்று ஜோலார்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஜோலார்பேட்டையை அடுத்த சின்னகம்மியம்பட்டு பகுதியில் மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்த சின்னகம்மியம்பட்டு பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (40) என்பவரை கைது செய்தனர்.

இதேபோல் பாச்சல் பகுதியைச் சேர்ந்த மதியழகன் மகன் ராஜன் (33), பால்னாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த புகழேந்தி (45) மற்றும் மேல்அச்சமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் (50) ஆகியோரும் தங்களது வீட்டின் பின்புறம் மதுபாட்டில்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து ராஜன், புகழேந்தி ஆகிய இருவரையும் கைது செய்தனர். ஆனந்தனை தேடி வருகின்றனர்.


Next Story