104 மாணவர்களுக்கு பழங்குடியினர் இன சான்றிதழ்


104 மாணவர்களுக்கு பழங்குடியினர் இன சான்றிதழ்
x

104 மாணவர்களுக்கு பழங்குடியினர் இன சான்றிதழ்

தஞ்சாவூர்

இது குறித்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறியதாவது:-

விளிம்புநிலை மக்களுக்காக அவர்கள் வசிக்கும் கிராமங்களுக்கு நேரடியாக சென்று அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அதன் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் விளிம்புநிலை மக்களுக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் ஏற்கனவே ஆதியன் இன மக்களுக்கும், இருளர் இன மக்களுக்கும் சாதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

மனநிறைவை அளிக்கிறது

தற்போது மவுலான தோப்பு காட்டுநாயக்கன் குடியிருப்பு மற்றும் விக்ரமம் ஊராட்சியில் வசிக்கும் 52 குடும்பங்களை சேர்ந்த 104 மாணவ, மாணவிகளுக்கு பழங்குடியினர் இன வகுப்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. 50 ஆண்டுகளுக்கு மேல் பழங்குடியினர் இன சான்றிதழ் வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தற்போது தமிழக அரசு இவர்களுக்கு பழங்குடியினர் இன சான்றிதழ்கள் வழங்கி வருகிறது. இதன்மூலம் இவர்களின் பொருளாதாரம் மேம்பாடு அடைய வழி வகுக்கும். மேலும் இப்பகுதி மக்கள் பட்டா கோரி விண்ணப்பம் அளித்துள்ளனர். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும். மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வந்தாலும் செந்தமிழ் நகர், விளிம்புநிலை மக்களுக்கான திட்டம் ஆகியவை தான் மனநிறைவை தருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story