ஓய்வு பெற்ற கோர்ட்டு ஊழியர் வீட்டில்100 பவுன் நகைகள்-ரூ.3 லட்சம் கொள்ளை


ஓய்வு பெற்ற கோர்ட்டு ஊழியர் வீட்டில்100 பவுன் நகைகள்-ரூ.3 லட்சம் கொள்ளை
x

ஓய்வு பெற்ற கோர்ட்டு ஊழியர் வீட்டில்100 பவுன் நகைகள்-ரூ.3 லட்சம் கொள்ளை

திருவாரூர்

நீடாமங்கலம் அருகே ஓய்வுபெற்ற கோர்ட்டு ஊழியர் வீட்டில் 100 பவுன் நகைகள் மற்றும் ரூ.3 லட்சம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி ேதடி வருகின்றனர்.

ஓய்வு பெற்ற கோர்ட்டு ஊழியர்

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள ஆதனூர் மண்டபம் மெயின்ரோடு பகுதியில் வசித்து வருபவர் குருமூர்த்தி(வயது 66). ஓய்வு பெற்ற கோர்ட்டு ஊழியர். இவரது மனைவி கலைச்செல்வி(58).

இவர்களது மூத்த மகள் கோமதி(37). இவர், தஞ்சை சப்-கோர்ட்டில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். 2-வது மகள் பொன்னி(36). இவர்கள் இருவருக்கும் திருமணமாகி விட்டது. இவர்களில் மூத்தமகள் தஞ்சாவூரிலும், இளையமகள் புதுக்கோட்டையிலும் வசித்து வருகிறார்கள்.

மகள் வீட்டில் தங்கினார்

குருமூர்த்தி கடந்த ஒரு மாதமாக உடல்நலக்குறைவு காரணமாக தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். சிகிச்சைக்கு பின்னர் தஞ்சையில் உள்ள மூத்த மகள் வீட்டில் தங்கியிருந்தார். கலைச்செல்வி புதுக்கோட்டையில் உள்ள தனது இளைய மகள் வீட்டிற்கு கடந்த வாரம் சென்று தங்கியிருந்தார்.

இந்த நிலையில் குருமூர்த்தி நேற்று காலை தனது வீட்டிற்கு வந்தார். முன்பக்க கேட்டை திறந்து வீட்டின் கதவருகே சென்றபோது கதவு திறந்து கிடந்தது தெரிய வந்தது.

100 பவுன் நகைகள்-ரூ.3 லட்சம் கொள்ளை

இதனால் அதிர்ச்சியடைந்த குருமூர்த்தி வீட்டிற்குள் சென்று பார்த்தபோது உள்புற கதவும் திறக்கப்பட்டு, பூஜை அறையில் இருந்த இரண்டு மர பீரோக்கள் உடைத்து திறக்கப்பட்டு பீரோக்களின் உள்ளே இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தது.

பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 100 பவுன் நகைகள், ரூ.3 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதனால் பெரும் அதிர்ச்சிக்குள்ளான குருமூர்த்தி இதுகுறித்து உடனடியாக நீடாமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த மன்னார்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு அஸ்வந்த் ஆன்டோ, நீடாமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

மேலும் சம்பவ இடத்துக்கு போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்களும் அங்கு வந்து கொள்ளை நடந்த வீட்டில் பதிவாகி இருந்த தடயங்களை பதிவு செய்தனர்.

வலைவீச்சு

குருமூர்த்தி வீட்டில் ஆட்கள் இல்லை என்பதை தெரிந்து ெகாண்ட மர்ம நபர்கள் சம்பவத்தன்று வீட்டின் முன்பக்கமாக வந்து வீட்டின் பீரோவில் வைத்து இருந்த நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து உள்ளனர். பின்னர் பின்பக்கம் கொல்லைப்புற கதவை திறந்து அவர்கள் வெளியேறியது தெரிய வந்தது.

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக நீடாமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி நகை-பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்,

பரபரப்பு

இந்த கொள்ளை சம்பவம் ஆதனூர் மண்டபம் மட்டுமல்லாமல் நீடாமங்கலம் பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story