ரூ.100 கோடியில் சாலை பணிகள்


ரூ.100 கோடியில் சாலை பணிகள்
x

திருச்சுழி தொகுதியில் ரூ.100 ேகாடியில் சாலை பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

விருதுநகர்

காரியாபட்டி,

திருச்சுழி தொகுதியில் ரூ.100 ேகாடியில் சாலை பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

தரைப்பாலம்

காரியாபட்டியில் இருந்து நரிக்குடிக்கு செல்ல முடுக்கன்குளம், எஸ்.மறைக்குளம், பனைக்குடி வழியாக சாலை உள்ளது. இந்த வழித்தடத்தில் 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்தநிலையில் முடுக்கன்குளம் கண்மாய்க்கு நீர் வரத்துக்காக தரைப்பாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலத்தில் சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.

ஆதலால் விபத்தை தவிர்க்க மேம்பாலம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து காரியாபட்டி - நரிக்குடி சாலையில் ராபதியேந்தல் விலக்கு, எம். இலுப்பை குளம் ஆகிய 2 இடங்களில் உயர்மட்ட பாலம் அமைப்பதற்காக பூமி பூஜை நடைபெற்றது.

சாலை வசதி

இதில் அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

திருச்சுழி தொகுதி மிகவும் பின் தங்கிய பகுதி மட்டுமின்றி கிராமங்கள் நிறைந்த பகுதியாகும். திருச்சுழி தொகுதியில் சாலை வசதிகளை மேம்பாடு செய்ய நபார்டு வங்கி மூலம் ரூ.100 கோடி செலவில் தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் நபார்டு மற்றும் கிராம சாலைகள் கண்காணிப்பு பொறியாளர் முருகேசன், கோட்ட பொறியாளர் பாக்கியலட்சுமி, ஒன்றிய செயலாளர்கள் செல்லம், கண்ணன், பொன்னுத்தம்பி, நரிக்குடி கண்ணன், சந்தனப்பாண்டி, காரியாபட்டி பேரூராட்சி தலைவர் செந்தில், மாவட்ட கவுன்சிலர்கள் தங்க தமிழ்வாணன், கமலிபாரதி, மாவட்ட பொருளாளர் வேலுச்சாமி, மாவட்ட கலை இலக்கிய பேரவை துணை அமைப்பாளர் வாலை முத்துச்சாமி, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி தலைவர் தங்கப்பாண்டியன், துணைத்தலைவர் கல்யாணி, ஆத்மா குழு தலைவர் இலுப்பைகுளம் பேரூராட்சி கவுன்சிலர் முகமது முஸ்தபா, கந்தசாமி, ஒன்றிய வர்த்தக அணி அமைப்பாளர் பஜார் குரு, ஒன்றிய மாணவரணி செயலாளர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story