22 கிலோ கஞ்சா பதுக்கியவருக்கு 10 ஆண்டு சிறை


22 கிலோ கஞ்சா பதுக்கியவருக்கு 10 ஆண்டு சிறை
x

22 கிலோ கஞ்சா பதுக்கியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது.

மதுரை

மதுரை செல்லூர் பகுதியில் கஞ்சா கடத்துவதாக கடந்த 2015-ம் ஆண்டில் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அந்த பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது செல்லூர் அம்மச்சியார் கோவில் அருகில் உள்ள பாலத்தின் அடியில் சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்தவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில் அவர் சம்மட்டிபுரத்தை சேர்ந்த மதியழகன் (வயது 34) என்பதும், 22 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரிந்தது. உடனடியாக கஞ்சாவை பறிமுதல் செய்து, இந்த வழக்கில் அவரை சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட முதன்மை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. அரசு தரப்பில் வக்கீல் தங்கேஸ்வரன் ஆஜரானார். முடிவில், மதியழகன் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டன. இதனால் அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி செங்கமலச்செல்வன் நேற்று தீர்ப்பளித்தார்.


Related Tags :
Next Story