பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.1¼ கோடிக்கு பருத்தி ஏலம்


பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.1¼ கோடிக்கு பருத்தி ஏலம்
x

பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.1¼ கோடிக்கு பருத்தி ஏலம்

ஈரோடு

அம்மாபேட்டை

அம்மாபேட்டை அருகே உள்ள பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி ஏலம் நடந்தது. இதற்கு சேலம் மாவட்டம் கொங்கணாபுரம், தேவூர், கோனேரிப்பட்டி, எடப்பாடி, மேட்டூர், கொளத்தூர் அந்தியூர், பவானி, சித்தார், அம்மாபேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் 4ஆயிரத்து 993பருத்தி மூட்டைகளை கொண்டு வந்திருந்தனர்.

இதில் பிடி ரகப் பருத்தி குறைந்தபட்ச விலையாக குவிண்டால் ஒன்று ரூ.6ஆயிரத்து 980-க்கும், அதிகபட்சமாக ரூ.7ஆயிரத்து608-க்கும் விற்பனையானது. இதனை பவானி, பெருந்துறை, சத்தியமங்கலம், புளியம்பட்டி, அன்னூர், கோவை, கொங்கணாபுரம், அந்தியூர் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் போட்டி போட்டு ஏலத்தில் எடுத்துச் சென்றனர். மொத்தம் ரூ.1கோடியே 20லட்சத்து 47ஆயிரத்து65க்கு பருத்தி விற்பனையானது.


Next Story