'என் குப்பை என் பொறுப்பு' விழிப்புணர்வு ஊர்வலம்


என் குப்பை என் பொறுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
x

வேதாரண்யத்தில் ‘என் குப்பை என் பொறுப்பு’ விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யம் நகராட்சி சார்பில் ராஜாஜி பூங்காவில் 'என் குப்பை என் பொறுப்பு' என்ற விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையர் ஹேமலதா தலைமை தாங்கினார். நகராட்சி ஓவர்சியர் குமரன் வரவேற்றார்.இதில் நகராட்சி துணைத் தலைவர் மங்களநாயகி, நகர மன்ற உறுப்பினர்கள் உமா, மயில்வாகனன், செல்வம், பொறியாளர் முகமது இப்ராஹிம், நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு'என் குப்பை என் பொறுப்பு' என்ற உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பின்னர் ராஜாஜி பூங்காவில் இருந்து விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலம் மேல வீதி, வடக்கு வீதி வழியாக சென்று நகராட்சி அலுவலகத்தை சென்றடைந்தது. ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும். பிளாஸ்டிக் தவிர்ப்போம், கடைகளுக்கு மஞ்சள் பை எடுத்து செல்லவேண்டும் என கோஷங்கள் எழுப்பியவாறு சென்று பொதுமக்களுக்கு துண்டுபிரசுரங்களை வழங்கினர்.


Next Story