எம்.ஜி. குளோஸ்டெர் அறிமுகம்


எம்.ஜி. குளோஸ்டெர் அறிமுகம்
x

எம்.ஜி. நிறுவனம் புதிய மேம்படுத்தப்பட்ட குளோஸ்டெர் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

இதில் 6 பேர் மற்றும் 7 பேர் பயணிக்கும் வகையில் மாடல்கள் வந்துள்ளன. அத்துடன் 4 சக்கர சுழற்சி கொண்ட வாகனத்தையும் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யலாம். கதவு திறந்திருப்பதை எச்சரிக்கும் (டி.ஓ.டபிள்யூ.) புதிய நுட்பம், பின்புறம் வாகன நெரிசலை எச்சரிக்கும் அம்சம், லேன் மாறுவதற்கு உதவும் வசதி (எல்.சி.ஏ.) ஆகியன இதில் புதிதாக சேர்க்கப்பட்ட அம்சங்களாகும்.

ஏற்கனவே உள்ள 30 வகையான தொழில்நுட்ப வசதி களுடன் இப்புதிய அம்சங்களைக் கொண்டதாக இது வந்துள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.31.99 லட்சம் முதல் ஆரம்பமாகிறது. பிரீமியம் மாடல் விலை சுமார் ரூ.40.77 லட்சம். இந்தியாவில் அறிமுக மாகும் எஸ்.யு.வி.க்களில் இத் தகைய மேம்பட்ட தானியங்கி தொழில்நுட்ப வசதிகள் கொண்ட முதலாவது மாடலாக இது வந்துள்ளது. காற்றாலை மின் விசிறி போன்ற வடிவமைப்புக் கொண்ட அலாய் சக்கரங்கள் இந்தக் காருக்கு சிறப்பான தோற்றம் அளிக்கிறது.

நான்கு சக்கர சுழற்சி கொண்ட மாடலில் இத்தகைய சக்கரங்கள் உள்ளன. தங்க நிற தோற்றம் சொகுசு மாடல் காருக்கான அந்தஸ்து மேலும் மெருகேற காரணமாக அமைந்துள்ளது. இத்துடன் கருப்பு, கிரே, வெள்ளை வண்ணங்களிலும் இந்த மாடல் கார்கள் கிடைக்கும்.

இதன் உள்பகுதியில் 31.2 செ.மீ. தொடு திரை மற்றும் உயர் தரத்திலான ஆடியோ சிஸ்டம் உள்ளது. காரினுள் உள்ள 12 ஸ்பீக்கர்கள் மேம்பட்ட இசை அனுபவத்தை அளிக்கும். ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே இயங்குதளம் உடையது. 158.5 கிலோவாட் சக்தியை இது வெளிப்படுத்தும். செய்திக்கான செயலி மற்றும் கானா பாடலை குரல் வழி கட்டுப்பாடு மூலம் தேடும் வசதிகளைக் கொண்டது.

இந்தக் காருக்கான செயலியை பதிவிறக்கம் செய்வதன் மூலம் 75-க்கும் மேம்பட்ட கார் சேவை களைப் பெற முடியும். இது 2 லிட்டர் டீசல் என்ஜினைக் கொண்டது. 7 விதமான ஓட்டும் நிலைகள், 12 நிலைகளில் டிரைவர் இருக்கையை அட்ஜெஸ்ட் செய்யும் வசதி, வயர்லெஸ் சார்ஜிங் உள்ளிட்ட பல வசதிகளைக் கொண்டது.


Next Story