இவ்வளவு வேகம் எப்படி சாத்தியம்..! கண் சிமிட்டுவதற்குள் டிக்கெட்டுகளை அச்சடித்து வியக்க வைக்கும் நபர்; வைரல் வீடியோ
இந்திய ரெயில்வே ஊழியர் ஒருவர் கண் சிமிட்டுவதை விட வேகமாக டிக்கெட்டுகளை அச்சடிக்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.
மும்பை,
இந்திய ரெயில்வே ஊழியர் ஒருவர் கண் சிமிட்டுவதை விட வேகமாக டிக்கெட்டுகளை அச்சடிக்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.
ரெயில்வே ஊழியர் ஒருவர் சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளார். சமீபத்தில் முதியவர் ஒருவர் பயணிகளுக்கான டிக்கெட்டுகளை அச்சடிப்பது கேமராவில் பதிவானது. அந்த வீடியோவில், முதியவர் ஒருவர் கண் இமைக்கும் நேரத்தில் டிக்கெட்டுகளை அச்சிடுவதைக் காணலாம்.
ஆனால் அவர் அந்த வேலையை எவ்வளவு வேகமாக செய்தார் என்பதுதான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
ரெயில்வே நிலையத்தில், புறநகர் ரெயில் சேவைக்கான டிக்கெட்டுகள் வழங்கும் எந்திரத்தில் அந்த நபர், பயணிகளிடம் பணத்தை பெற்றுக்கொண்டு, மளமளவென தொடுதிரையில் விரல்களை மிக வேகமாக நகர்த்தி டிக்கெட்டுகளை வழங்குகிறார்.
பொதுவாக கணிணி மற்றும் அச்சுப்பயிற்சி செய்வோர் கீ போர்டில் வேகமாக அச்சிடுவதை காணலாம். ஆனால், டச் ஸ்கிரீன் எனப்படும் தொடு திரையில் இவ்வளவு வேகமாக டைப்பிங் செய்வது புதுமையாக உள்ளது.
இந்த வீடியோவை பார்த்த பலர் அவரை சூப்பர் ஹீரோ கதாபாத்திரமான 'ப்ளாஷ்' உடன் ஒப்பிட்டனர்.