குப்பையில் சம்பாதிக்கும் இளம் படை


குப்பையில் சம்பாதிக்கும் இளம் படை
x

தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் பணிபுரிந்து வந்த என்லோவு, குப்பைகளை மறுசுழற்சி செய்வதற்காக அரசின் மானிய உதவி பெற்றிருக்கிறார்.

தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் பணிபுரிந்து வந்த என்லோவு தன் சிறிய ஊரான ஸ்டீன்போக்குக்கு கிளம்பினார். அங்கு தன் நண்பர் சியபோங்காவுடன் இணைந்து குப்பைகளை மறுசுழற்சி செய்யும் தொழில் முயற்சியை தொடங்கினார். இருவரும், பல நகரங்களில் குப்பைகளை சேகரித்தனர். அதை பிரிடோரியா மற்றும் ஜோகன்னஸ்பர்க் நகரங்களிலுள்ள நிறுவனங்களுக்கு விற்கத் தொடங்கினர். கூடவே, குப்பைகளில் இருந்து மின்சாரம், பயோடீசல் உற்பத்தி செய்ய திட்டமிட்டிருக்கிறார், என்லோவு.

குப்பைகளை மறுசுழற்சி செய்வதற்காக அரசின் மானிய உதவி 3 லட்சத்து 80 ஆயிரம் டாலர்களை என்லோவு பெற்றிருக்கிறார். கூடவே, தன்னுடைய நண்பர்கள் போக, ஏழு முழுநேரப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தி, குப்பைகளை தரம்பிரித்து விற்று வருகிறார்.

இவர்களது படை, தற்போது 60 முதல் 700 டன்கள் கழிவுகளை மறுசுழற்சி செய்திருக்கிறது. எம்பாம்பெலா முனிசிபாலிட்டியில் கழிவுகளை பயோடீசலாக மாற்றும் எந்திரங்களை அமைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளனர்.


Next Story