14,400 கி.மீ பயணம்...! 30 வயது வாலிபரை கரம் பிடித்த 60 வயது பெண்


14,400 கி.மீ பயணம்...! 30 வயது வாலிபரை கரம் பிடித்த 60 வயது பெண்
x

60 வயது பெண் ஒருவர், தன்னைவிட 30 வயது இளையவரான பழங்குடியினக் காதலனை, 14,400 கி.மீ கடந்து சென்று கரம்பிடித்திருக்கிறார்.

வாஷிங்டன்

டெபோரா(60) வயது என்ற பெண் கடந்த அக்டோபர் 2017-ல் தன் மகளுடன் தான்சானியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அங்கு சைட்டோடி பாபு என்ற பழங்குடியின வாலிபரை சந்தித்திருக்கிறார்.

பின்னர் ஒருநாள் டெபோராவும், அவரின் மகளும் சான்சிபார் கடற்கரையில் நடந்து சென்றபோது மீண்டும் சைட்டோடியைச் சந்திக்கும் சூழல் உருவானது. அப்போது, சைட்டோடியும், அவரின் சக பழங்குடியினரும், டெபோராவுக்கு சில நினைவுப்பரிசுகள் வழங்கினர்.

ஆனால், டெபோரா அவற்றை ஏற்க மறுத்துவிட்டார், இருப்பினும் `புகைப்படம் எடுத்துக்கொள்ளலாமா?' என்று மட்டும் கேட்டிருக்கிறார். அதில் தொடங்கிய நட்பு கொஞ்சம் கொஞ்சமாகக் காதலாக மாறியது. பின்னர் டெபோரா அமெரிக்காவுக்குத் திரும்பியதும், சைட்டோடியிடமிருந்து திருமணம் பற்றிய கேள்வி எழுந்தது.

அதையடுத்து, டெபோரா தன்னுடைய குழந்தைகளின் ஊக்கத்துடன் சைட்டோடியைச் சந்திக்க டிசம்பரில் மீண்டும் தான்சானியா வந்தார். சைட்டோடியும் திருமணம் குறித்த தன் விருப்பத்தை அவரிடம் தெரிவித்தார். பின்னர் கடந்த 2018, ஜூன் மாதத்தில் பாரம்பரிய மாசாய் பாணியில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். ஆனாலும், இவர்களின் திருமணம் இந்த ஆண்டுதான் சட்டபூர்வமாக்கப்பட்டது.

சமீபத்தில் பிலிப்பைன்சில் 78 வயது முதியவர் ஒருவர், 18 வயது பெண்ணை மூன்று வருடங்களாகக் காதலித்து கரம்பிடித்தார் என்பது குறிப்பிடதக்கது.


Next Story