கேலக்ஸி எம் 32


கேலக்ஸி எம் 32
x
தினத்தந்தி 24 Jun 2021 6:28 AM GMT (Updated: 24 Jun 2021 6:28 AM GMT)

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி வரிசையில் எம் 32 மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு முன்பு கடந்த ஆண்டு எம் 31 மாடல் அறிமுகமானது.

மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் கொரியாவைச் சேர்ந்த சாம்சங் நிறுவனம் கேலக்ஸி வரிசையில் எம் 32 மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு முன்பு கடந்த ஆண்டு எம் 31 மாடல் அறிமுகமானது. தற்போது அறிமுகமாகும் எம் 32 மாடலை பிங்கே மான்ஸ்டர் என அந்நிறுவனம் வர்ணித்துள்ளது. எம் சீரிஸில் இந்நிறுவனம் வெளியிடும் 6 வது மாடல் ஸ்மார்ட்போன் இதுவாகும். இது 6.4 அங்குல அமோலெட் திரையைக் கொண்டுள்ளது.

கருப்பு மற்றும் நீல நிறத்தில் இது வந்துள்ளது. நீண்ட நேரம் செயல்பட வசதியாக 6 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி உள்ளது. இதற்கு பக்கவாட்டுப் பகுதியில் விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது. மேலும் இதில் மீடியா டெக் ஹீலியோ ஜி 85 பிராசஸர் பயன்படுத்தப் பட்டுள்ளது.

4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. நினைவகம் மற்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் கொண்டதாக இரு மாடல்கள் வந்துள்ளன. இதன் பின்புறம் 64 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா, ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

Next Story