மறைமலை அடிகள்


மறைமலை அடிகள்
x
தினத்தந்தி 21 Jun 2021 6:59 AM IST (Updated: 21 Jun 2021 6:59 AM IST)
t-max-icont-min-icon

புகழ் பெற்ற தமிழறிஞரான மறைமலை அடிகள் தமிழ் ஆய்வாளர் ஆவார். தமிழையும், வடமொழி யையும், ஆங்கிலத்தையும் நன்கு கற்றவர்.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் சொக்கநாதபிள்ளை, சின்னம்மை தம்பதிக்கு கடந்த 1876-ம் ஆண்டு ஜூலை மாதம் 15-ந் தேதி பிறந்தவர் மறைமலை அடிகள். இவரது இயற்பெயர் வேதாசலம் ஆகும். பின்னர் தனித்தமிழ் பற்று காரணமாக தனது பெயரை 1916-ம் ஆண்டு மறைமலை என்று மாற்றி கொண்டார். புகழ் பெற்ற தமிழறிஞரான மறைமலை அடிகள் தமிழ் ஆய்வாளர் ஆவார். தமிழையும், வடமொழி யையும், ஆங்கிலத்தையும் நன்கு கற்றவர். உயர்தனி செம்மொழி யான தமிழை, வடமொழி கலப்பின்றி தூய நடையில் எழுதி பிறரையும் ஊக்குவித்தவர். மேலும் தனித் தமிழ் இயக்கத்தை தொடங்கி தமிழை செழுமையாக வளர்த்த வர் ஆவார். ஆரம்பத்தில் நாகை யில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில் 4-ம் வகுப்பு வரை படித்தார். ஆனால் தந்தையின் மறைவுக்கு பிறகு அவரால் படிப்பை தொடர முடியவில்லை. எனினும் அங்கு புத்தக கடை வைத்திருந்த தமிழ்ப்புலமை மிகுந்த நாராய ணசாமி பிள்ளை என்பவரிடம் தமிழ் கற்றார். சைவ சித்தாந்த சண்டமாருதம் என்று புகழ் பெற்றிருந்த சோமசுந்தர நாயக் கரிடம் சைவ சித்தாந்தம் கற்றார். இதையடுத்து அவர் சென் னைக்கு வந்த பிறகு கிறிஸ்தவ கல்லூரியில் வீ.கோ.சூரியநா ராயண சாத் திரியாருடன் தமிழ் பேராசிரியராக பணிபுரிந்தார். 1905-ல் சைவ சித்தாந்த மகா சமாசம் என்ற அமைப்பை தோற்றுவித்தார். பல ஆண்டுகள் பேராசிரி யராக பணியாற்றிய பிறகு பல்லாவரத் தில் வள்ளலாரின் கொள்கைப்படி 1912-ம் ஆண்டு சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை தொடங்கி னார். பின்னர் தனித்தமிழ் ஈடுபாட்டால் அதனை பொது நிலைக்கழகம் என்று பெயர் மாற்றம் செய்தார். திருமுருகன் அச்சுக்கூடத் தை ஏற்படுத்தி பல நூல்களை வெளியிட்டார். மணிமொழி நூல்நிலையம் என்ற நூல்நிலையத்தை உருவாக்கி னார். இவர் வாழ்ந்த காலத்தில் பல புகழ் பெற்ற தமிழறிஞர்கள் வாழ்ந்தனர். அதாவது மனோன் மணியம் இயற்றிய சுந்தரனார், திரு.வி.கலியாண சுந்தரனார், தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதை யர், சுப்பிரமணிய பாரதியார், மீனாட்சி சுந்தரனார் என்று பலர் வாழ்ந்த காலம். பல்லாவரம் முனிவர் என்றும் குறிப்பிடப்பட்ட மறைமலை அடிகள் அறிவுரைக் கொத்து, அறிவு ரைக் கோவை, கருத்தோவி யம், தமிழர் மதம் உள்பட 54 நூல்களை எழுதி உள்ளார்.

Next Story